search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணாநிதி மரணம்"

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்த அதிர்ச்சியில் தி.மு.க.வினர் 3 பேர் குமரி மாவட்டத்தில் இறந்துள்ளனர்.
    குலசேகரம்:

    குலசேகரம் அருகே உள்ள உண்ணீர் கோணத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (வயது52). இவர் குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. ஆதி திராவிடர் துணைச் செயலாளராக பணியாற்றி வந்தார்.

    இவர் நேற்று காலை முதல் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்தார். மாலையில் திடீரென்று கிறிஸ்துதாசுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டுச்சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அஞ்சுகிராமம் அருகே உள்ள கனகப்பபுரத்தைச் சேர்ந்தவர் சாமிகண்நாடார்(62). நீண்ட கால தி.மு.க. உறுப்பினரான இவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி காவேரி ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டது முதல் மனவேதனையுடன் காணப்பட்டார். இந்த நிலையில் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து இறந்து விட்டார்.

    திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர்(60). தீவிர தி.மு.க. தொண்டரான இவர் கருணாநிதி மரணம் அடைந்த செய்தி கேட்டு மயங்கி விழுந்தார்.

    அவரை உறவினர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தி.மு.க. தொண்டர்கள் 3 பேர் பலியானது அவர்களது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. தி.மு.க. நிர்வாகிகளும் அவர்களது உட லுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.



    கருணாநிதி மரணம் அடைந்த அதிர்ச்சியில் தி.மு.க. தொண்டர்கள் 34 பேர் உயிர் இழந்தனர். மேலும் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். #Karunanidhi #DMK
    பெரியபாளையம்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மாலை மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடலை சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி பின்புறம் அடக்கம் செய்ய அனுமதி கோரப்பட்டது. ஆனால் தமிழக அரசு அதனை மறுத்துவிட்டது.

    இந்த செய்தியை கேட்டு திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள திருநிலை கிராமத்தை சேர்ந்த தி.மு.க. உறுப்பினரான ராஜ் (வயது 32) மிகுந்த வருத்தத்தில் இருந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ராஜ், நேற்று காலை திருநிலை கிராமத்தில் உள்ள ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதற்கிடையே, அண்ணா சமாதி பின்புறம் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.



    தேனி மாவட்டம் போடி ராசிங்காபுரத்தை சேர்ந்த தி.மு.க. தொண்டரான முருகேசன் (45) கருணாநிதி மரணம் குறித்த செய்தியை கேட்டதும் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கினார். மீளா துயரத்தில் இருந்த அவர் நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேலம் மாவட்டம் எடப்பாடி கொங்கணாபுரத்தை அடுத்த எலவம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜா என்ற வெள்ளகுட்டி (45). தி.மு.க. உறுப்பினர். கருணாநிதி இறந்ததை அறிந்த ராஜா துக்கம் தாங்காமல் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள புறா கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் உலகநாதன் (47), மயிலாடுதுறை அருகே உள்ள பண்டாரவடை நெய்குப்பை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (70), மயிலாடுதுறையை அடுத்த பெரம்பூர் கீழத்தெருவை சேர்ந்த நாதஸ்வர வித்வானான ராஜேந்திரன் (50), மயிலாடுதுறை மேலபெரம்பூர் கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி (56), மணல்மேடு அருகே உள்ள கொற்கை கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (70) ஆகிய தி.மு.க. தொண்டர்கள் கருணாநிதி இறந்த செய்தி கேட்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தனர்.

    அதே போல் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா கீழ்புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வரதன் (74), புளியரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சுசீலா (60) மற்றும் ஆரணி அம்பேத்கர் நகரை சேர்ந்த பெருமாள் மனைவி பாப்பாம்மாள் (57) ஆகியோர் கருணாநிதி இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உயிர் இழந்தனர்.

    வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்தை சேர்ந்த மேல்வல்லம் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன் (65), நேற்று முன்தினம் மாலை கருணாநிதி இறந்த செய்தியை தொலைகாட்சியில் பார்த்துக்கொண்டிருந்தபோது அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

    திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 34-வது வார்டு குருநகரை சேர்ந்த தி.மு.க. உறுப்பினர் சுப்பம்மாள் (60), வத்தலக்குண்டு அருகே உள்ள விராலிபட்டியை அடுத்த குரும்பட்டியை சேர்ந்த தி.மு.க. தொண்டரான கருப்பையா (55) ஆகியோர் கருணாநிதி இறந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியால் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தனர்.

    தேனி மாவட்டம் தேவாரம் மெயின்பஜார் தெருவை சேர்ந்த சுலைமான் (65), போடியை சேர்ந்த தி.மு.க. தொண்டர் கோவிந்தன் (55) ஆகிய இருவரும் கருணாநிதி இறந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தனர்.

    விழுப்புரம் முத்தோப்பு வார்டு தி.மு.க. பிரதிநிதியான பன்னீர்செல்வம் (59) திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகரான குமரவேல் ஆகிய 2 பேரும் கருணாநிதி இறந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தனர்.

    அதேபோல் உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றிய தி.மு.க. மகளிரணி நிர்வாகியான பூவாடு கிராமத்தை சேர்ந்த பெருமா (60) என்பவர் நேற்று முன்தினம் மாலை கருணாநிதி உயிர் இழந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து மயங்கி விழுந்து இறந்தார்.

    சேலம் தென்அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (45). தி.மு.க. தொண்டரான இவர் அழகாபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் கருணாநிதி உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியபோது, திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

    எடப்பாடி கக்சுபள்ளியை சேர்ந்த லட்சுமணன் (55), பூலாம்பட்டி சந்தை பேட்டையை சேர்ந்த தி.மு.க. தொண்டரான வெங்கடாசலம் (60) ஆகியோர் கருணாநிதி இறந்த செய்தியை கேட்டு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கங்கதேவனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சிக்கதாய்ப்பா (80) கருணாநிதி மறைவு செய்தி அறிந்ததும் அதிர்ச்சியில், மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

    தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள சவுளுபட்டி கொட்டாவூரை சேர்ந்த சண்முகம் (55) கருணாநிதி மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டதும் மயங்கி விழுந்து இறந்தார்.

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள வடக்கு பொன்னன்விடுதி கிராமத்தை சேர்ந்தவர் சின்னையா (65), தி.மு.க. கிளை உறுப்பினராக இருந்தார். நேற்று முன்தினம் கருணாநிதி மரணம் அடைந்தார் என்ற செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்த சின்னையா அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார்.

    கீரனூர் அருகே உள்ள இளையாவயல் கிராமத்தை சேர்ந்த தி.மு.க. உறுப்பினரான ராமன் (50), திருவரங்குளம் பாரதியார் நகரை சேர்ந்த பழனியம்மாள் (75) ஆகிய இருவரும் கருணாநிதி இறந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிர் இழந்தனர்.

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா நத்தக்காடையூர் அருகே உள்ள புதுவெள்ளியம்பாளையத்தை சேர்ந்த குருசாமி (55) காங்கேயம் வடக்கு ஒன்றியம் நத்தக்காடையூர் ஊராட்சி 5-வது வார்டு தி.மு.க. செயற்குழு உறுப்பினராக இருந்தார். இவர் நேற்று முன்தினம் கருணாநிதி இறந்த செய்தியை கேட்டு, கவலையுடன் தூங்க சென்றார். நேற்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு தூக்கத்திலேயே அவர் இறந்தார்.

    நெல்லை டவுனை சேர்ந்த குருநாதன் என்ற குருசாமி (49), நெல்லை மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள மருக்காலங்குளத்தை சேர்ந்த சண்முகையா (68), அதே ஊரை சேர்ந்த வேலுசாமி (68) ஆகிய தி.மு.க. தொண்டர்கள் கருணாநிதி இறந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்து இறந்தனர்.

    மதுரையை சேர்ந்தவர் அழகுராஜா (27), மதுரை கருப்பாயூரணி பகுதியை சேர்ந்த நாகராஜ் (34), அலங்காநல்லூரை அடுத்த மாணிக்கம்பட்டியை சேர்ந்தவர் சின்னச்சாமி (63), எர்ரம்பட்டியை சேர்ந்த அலங்கார கவுண்டர் (65), மதுரை பெருங்குடியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் கணபதியின் மனைவி சந்திரா (52) ஆகிய தி.மு.க. தொண்டர்கள் கருணாநிதி இறந்த தகவலை கேட்டு அதிர்ச்சியில் இறந்தனர்.

    குமரி மாவட்டம் திக்கணங்கோடு ஊராட்சி 17-வது வார்டு செயலாளராக இருந்தவர் அலெக்சாண்டர் (66). தி.மு.க.வின் தீவிர தொண்டரான இவர் நேற்று முன்தினம் மாலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்த செய்தியை கேட்டு மயங்கி விழுந்து இறந்தார். 
    கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் 22 பேர் படுகாயம் அடைந்தனர்.
    சென்னை:

    உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, நேற்றுமுன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

    இதையடுத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நேற்று சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது. அங்கு அவருடைய உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    மேலும் பொதுமக்களும் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். முக்கிய பிரமுகர்களுக்கு என்று தனி வழியும், பொதுமக்களுக்கு என தனி வழியும் போலீசாரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அதன்படி பொதுமக்களை அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட வழியில் போலீசார் அனுப்பி வந்தனர். ராஜாஜி அரங்கில் பொதுமக்களின் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது. கருணாநிதியை கடைசியாக பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் பொதுமக்கள் முண்டி அடித்துக்கொண்டு வரிசையில் சென்றனர். மேலும் சில இடங்களில் போலீசார் வைத்திருந்த தடுப்புக்களை தகர்த்துவிட்டு பொதுமக்கள் முன்னேறி சென்றனர். அதோடு போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி முக்கிய பிரமுகர்கள் செல்லும் பாதையில் பொதுமக்கள் நுழைந்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. போலீசார், பொதுமக்களை கட்டுப்படுத்த முயன்றபோது இருதரப்புக்கும் இடையே ‘தள்ளு முள்ளு’ ஏற்பட்டது.

    இதில் பொதுமக்கள் பலர் கீழே விழுந்தனர். கூட்டநெரிசலில் சிக்கி பெண் போலீஸ் அனிதா (வயது 42) உள்பட 26 பேர் படுகாயம் அடைந்தனர். போலீசார் அவர்கள் அனைவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சென்னை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த செண்பகம் (60) என்ற பெண்ணும், ஒரு ஆணும் பரிதாபமாக உயிர் இழந்தனர். மற்ற 24 பேரும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை சரவணன் (37) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த துரை(45) என்பவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. மருத்துவமனையில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த குழந்தைவேலு (62), அம்பத்தூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (71), சென்னையை சேர்ந்த தங்கராஜ் (60), சத்யா (50), கென்னடி (55), வேலூரை சேர்ந்த ஜெயராமன் (54) மற்றும் காஞ்சீபுரத்தை சேர்ந்த சேட்டு (39) ஆகிய 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட் டனர். 
    துயரச்சுமையை தாங்கி வீட்டுக்கு திரும்பும் தொண்டர்கள் பத்திரமாக செல்ல வேண்டும் என இரு கரம் கூப்பி வேண்டுகிறேன் என முக ஸ்டாலின் கட்சி தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார். #KarunanidhiDeath #MKStalin #DMK
    சென்னை:

    திமுக தலைவராகவும் 5 முறை தமிழக முதல்வராகவும் இருந்த கருணாநிதி நேற்று மாலை மரணமடைந்தார். அவரது உடல் இன்று மாலை 7 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகே அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. 

    இந்நிலையில், திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தொண்டர்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், துயரச் சுமையை தாங்கியபடி ஊருக்கு செல்லும் தொண்டர்கள் பத்திரமாகவும், அமைதியாகவும் செல்ல வேண்டும் என இரு கரம் கூப்பி வேண்டுகிறேன். உடன்பிறப்புகள் பாதுகாப்பாக சேர்ந்து விட்டார்கள் என்பதை அறிந்த பின்னரே நான் உறங்கச் செல்வேன் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
    திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நடிகை நயன்தாரா இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார். #Kalaignar #Karunanidhi #Nayanthara
    திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தார்கள்.

    மேலும் சென்னை ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் பார்வைக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. இவரது உடலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். 

    தற்போது நடிகை நயன்தாரா இரங்கல் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,

    தங்களுடைய இனமான தலைவனை இழந்து வாடும் ஒவ்வொரு தமிழ் நெஞ்சத்துக்கும் என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரும் இரங்கல் செய்தி இது. நம் வாழ்வில் மிகுந்த இருண்ட 24 மணி நேர சோதனை இது என சொல்லலாம். சூரிய கதிரின் ஒளியை இழந்து தவிக்கிறோம்.

    நாம் ஒரு காலத்தை வென்ற எழுத்தாளரை, சிறந்த சொற்பொழிவாளரை, மிக சிறந்த அரசியல்வாதியை, நம் மாநிலத்தின் முகவரியான முகத்தை, இழந்து வாடுகின்றோம். 

    நம் மாநிலத்தின் குரலாக 75 ஆண்டுகளாக அவர் குரல் இருந்து வந்து இருக்கிறது! அவர் ஆற்றி இருக்கும் சாதனைகள் எண்ணில் அடங்காதவை. அவர் ஆட்சியில் இருக்கும் போது புரிந்த சாதனைகள் மறக்க முடியாதவை. 

    அவர் பிரிவால் வாடும் அன்னாரது குடும்பத்தாருக்கும், திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் இந்த மீளா துயரில் இருந்து மீண்டு வர என்  ஆழ்ந்த இரங்கலை
     தெரிவித்துக் கொள்கிறேன். வெளி ஊரில் நடந்து வரும் படப்பிடிப்பு காரணமாக அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல் போனதற்கு மிகவும் வருந்துகிறேன்.

    இவ்வாறு இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
    திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ட்விட்டரில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #AmitabhBachchan
    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தார்கள்.

    மேலும் சென்னை ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் பார்வைக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. இவரது உடலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.



    மேலும் டுவிட்டரில் பல பிரபலங்கள் ஆழந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், சிறந்த தலைவர் கருணாநிதி, அவர் முதலமைச்சராக இருக்கும் போது நான் விருது வாங்கி இருக்கிறேன். அவருக்கு என்னுடைய பிரார்த்தனை மற்றும் இரங்கல் என்று பதிவு செய்திருக்கிறார். 
    கருணாநிதியை நல்லடக்கம் செய்ய உள்ள பேழையில் ‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ, ஓய்வு கொண்டிருக்கிறான்’ வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. #RIPKarunanidhi
    இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல் அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக்குறைவால் நேற்று மாலை காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் அஞ்சலிக்கிடையே மாலை 4 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. அதன்பின் அவரது உடல் மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.

    அவரது உடல் வைக்கப்படும் சந்தன பேழையில் ‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ, ஓய்வு கொண்டிருக்கிறான்’ என்ற வாசகம் இடம்பிடித்துள்ளது.
    கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ராஜாஜி ஹாலுக்கு அலைகடலாக திருண்டு வந்த வண்ணம் உள்ளனர். #RIPKarunanidhi
    கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திமுக தலைவர்களும், தொண்டர்களும் அலை அலையாக வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் அண்ணாசாலை வழியாக ராஜாஜி அரங்கிற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு சிவானந்த சாலை வழியாக வெளியேற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    4 பாதைகளில் மக்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த 4 பாதைகளிலும் மக்கள் வெள்ளம் போல் காட்சி அளித்தனர். வாலாஜா சாலை, சிவானந்த சாலை, அண்ணா சாலை ஆகிய 3 சாலைகளிலும் எங்கு திரும்பினாலும் மக்கள் தலைகளாக காட்சி அளித்தது. லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தங்கள் தலைவனுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி சென்றனர்.

    மக்கள் வருகை அதிகரித்ததால் இந்த 3 சாலைகளிலும் ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த கடைகளில் புளிசாதம், இட்லி, தயிர் சாதம் போன்றவை விற்பனை செய்யப்பட்டன. பொது மக்கள் அவற்றை வாங்கி சாப்பிட்டுவிட்டு அங்கேயே சுற்றியப்படி காணப்பட்டனர்.



    கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்யலாம் என்று ஐகோர்ட்டு உத்தரவு வெளியிட்டதும் அண்ணாசாலை, வாலாஜா சாலை, சிவானந்த சாலை ஆகியவற்றில் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் ஆராவாரம் செய்தனர்.

    ஐகோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இதனால் மதியம் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் கடுமையாக திணற நேரிட்டது.
    சென்னை மெரினாவில் கருணாநிதி உடலை புதைக்க இடம் வழங்க முடியாது என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #RIPKarunanidhi
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கருணாநிதியின் உடல் இறுதி அஞ்சலிக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தின் அருகே கருணாநிதி உடலை அடக்கம் செய்ய ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

    ஆனால், மெரினாவில் நினைவிடம் ஒதுக்குவதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளதால், சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் அறிவித்தார். மெரினாவில் இடம் மறுக்கப்பட்டதால் திமுக தொண்டர்கள் கொதிப்படைத்தனர். தமிழகத்தில் பல இடங்களிலும் சாலை மறியல் நடந்து வருகிறது. காவேரி மருத்துவமனையின் வெளியே பேரிகார்டுகள் உடைக்கப்பட்டன. இதனால், பரபரப்பான சூழல் உருவானது.

    இதற்கிடையே, மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிரான தொடரப்பட்டு தற்போது நிலுவையில் இருக்கும் 5 வழக்குகளையும் திரும்ப பெற தயாராக இருப்பதாக மனுதாரர்கள் தெவித்துள்ளனர். அண்ணா சமாதி உள்ள பகுதி கடலோர பாதுகாப்பு மண்டலத்துக்குள் வரவில்லை என ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த துரைசாமி கூறினார்.

    தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராக சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷிடம் திமுக முறையிட்டது. இரவு 10.30 மணிக்கு இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், சுந்தர் ஆகியோர் மனுவை விசாரித்தனர்.

    தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபாலன், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் அரவிந்த் பாண்டியன் ஆகியோர் அரசுத் தரப்பில் ஆஜராகினர். திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சண்முக சுந்தரம், வில்சன் ஆஜராகினர்.

    சுமார் 2 மணி நேரம் நடந்த வழக்கு விசாரணையை அடுத்து, திமுகவின் மனு இன்று காலை 8 மணிக்கு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர். இது தொடர்பாக தமிழக அரசு, சென்னை மாநகராட்சி தங்களது பதிலை காலை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவித்தனர்.



    அதன்படி இன்று காலை 8 மணிக்கு இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில் மெரினா கடற்கரையில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காந்தி மண்டபத்தில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.

    மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டு காந்தி மண்டபத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அரசு அறிவிப்பு கொள்கை முடிவு என்பதால் அதனை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்றும் தமிழக அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது #Karunanidhi #DMK #RajajiHall #RIPKarunanidhi
    கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுத்ததை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில், இன்று காலை 8 மணிக்கு மனுவை நீதிபதிகள் ஒத்திவைத்து, அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர்
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கருணாநிதியின் உடல் இறுதி அஞ்சலிக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தின் அருகே கருணாநிதி உடலை அடக்கம் செய்ய ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

    ஆனால், மெரினாவில் நினைவிடம் ஒதுக்குவதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளதால், சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் அறிவித்தார்.

    மெரினாவில் இடம் மறுக்கப்பட்டதால் திமுக தொண்டர்கள் கொதிப்படைத்தனர். தமிழகத்தில் பல இடங்களிலும் சாலை மறியல் நடந்து வருகிறது. காவேரி மருத்துவமனையின் வெளியே பேரிகார்டுகள் உடைக்கப்பட்டன. இதனால், அங்கு பரபரப்பான சூழல் இருந்தது.

    மேலும், மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி #Marina4Kalaignar என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வந்தது. ராகுல் காந்தி முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர்.

    இதற்கிடையே, மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிரான தொடரப்பட்டு தற்போது நிலுவையில் இருக்கும் 5 வழக்குகளையும் திரும்ப பெற தயாராக இருப்பதாக மனுதாரர்கள் தெவித்துள்ளனர். அண்ணா சமாதி உள்ள பகுதி கடலோர பாதுகாப்பு மண்டலத்துக்குள் வரவில்லை என  ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த துரைசாமி கூறினார்.

    தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராக சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷிடம் திமுக முறையிட்டது. இரவு 10.30 மணிக்கு இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், சுந்தர் ஆகியோர் மனுவை விசாரித்தனர்.

    தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபாலன், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் அரவிந்த் பாண்டியன் ஆகியோர் அரசுத்தரப்பில் ஆஜராகினர். திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சண்முக சுந்தரம், வில்சன் ஆஜராகினர்.

    சுமார் 2 மணி நேரம் நடந்த வழக்கு விசாரணையை அடுத்து, திமுகவின் மனு இன்று காலை 8 மணிக்கு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர். இது தொடர்பாக தமிழக அரசு, சென்னை மாநகராட்சி தங்களது பதிலை காலை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவித்தனர். 
    திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு அதிமுக சார்பில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் கூட்டாக இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். #RIPKalaignar
    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். கருணாநிதி மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல முன்னணி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் கூட்டாக இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். அதில் ‘‘தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், இந்திய நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவரும், தமிழறிஞருமான கலைஞர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் கொள்கிறோம்.

    தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். போன்ற திராவிட இயக்கத் தலைவர்களோடும், ஏனைய திராவிட இயக்க முன்னோடிகளோடும் தோளோடு தோள் நின்று 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி அரசியலிலும், சமூகப் பணிகளிலும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்ற பெருமைக்குரியவர் கலைஞர் கருணாநிதி.

    திருக்குவளை என்னும் எளிய சிற்றூரில் பிறந்த ஏராளமான இடர்பாடுகளையும், சவால்களையும் தாண்டி, உழைப்பாலும், திறமையாலும் தன்னை உலகமறிந்த கலைஞராகவும், தலைவராகவும் உயர்த்திக் கொண்ட தனிப்பெரும் சிறப்பு கொண்டவர் கலைஞர் என்பதை எல்லோரும் ஏற்று பாராட்டுவர்.

    அரை நூற்றாண்டு காலம் தன்னை வழிநடத்திய சிறப்புமிக்க தலைவரை திமுக இழந்திருக்கிறது. பெருமைக்குரிய தலைவரை கலைஞரின் குடும்பம் இழந்திருக்கிறது. இந்த இழப்பினை தாங்கிக் கொள்ளும் மன உறுதியை அவரது குடும்பத்தினரும், இயக்கத்தினரும் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

    கலைஞர் கருணாநிதியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவர்பால் அன்பு கொண்ட அனைவருக்கும் அதிமுக சார்பில் ஆழந்த இரங்கலையும், உள்ளார்ந்த வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளனர்.
    திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு உங்களை கண்ணீரோடு வழியனுப்பி வணங்குகின்றோம் என்று நடிகர் தனுஷ் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். #Karunanidhi #RIPKarunanidhi #DMK #Dhanush
    திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். 

    இந்நிலையில், நடிகர் தனுஷ் ‘வஞ்சிக்கப்பட்ட தமிழனை, சுயமரியாதை சூரியனால் சுட்டெரித்து புடம் போட்ட தங்கமாக மாற்றிய கலைச்சூரியனே! பராசக்தி மூலமாக அரசியல் அறியவைத்து, எங்களைப்போன்ற பாமர்களுக்கும் திரைத்துறையின் கதவை எட்டி உதைத்து திறந்து வைத்த கலைஞரே! உங்களை கண்ணீரோடு வழியனுப்பி வணங்குகின்றோம்’ என்று கூறியிருக்கிறார்.


    ×